வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 31: உஷ்ட்ராசனம்

செய்திப்பிரிவு

முதுகை பாதி வளைத்து செய்கிற அர்த்த உஷ்ட்ராசனமும், தொடர்ந்து, உஷ்ட்ராசனத்துக்கான ஆயத்தப் பயிற்சியையும் பார்த்தோம். இப்போது, உஷ்ட்ராசனத்துக்கு தயாராகலாம்.

விரிப்பின் மீது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளவும். ஒவ்வொரு காலாக மடக்கிக்கொண்டு, வஜ்ராசனத்தில் அமரவும். இப்போது, முட்டி போட்டு நிற்கவும்.

மூச்சை இழுத்துக்கொண்டே, மெல்ல பின்னோக்கி வளைந்து இடது கையால் இடது குதிகால் அல்லது கணுக்காலை தொடவும். வலது கையால் வலது குதிகால் அல்லது கணுக்காலை தொடவும். கைகள் வழுக்கக்கூடும் என்பதால், குதிகால் அல்லது கணுக்கால் பகுதியை நன்கு உறுதியாக பிடித்திருப்பது அவசியம்.

மார்பு பகுதி நன்கு முன்னோக்கி வளைந்திருக்க, கழுத்து பகுதி ரிலாக்ஸாக இருக்கட்டும். தொடைப் பகுதி சாய்வாக இல்லாமல், தரைக்கு செங்குத்தாக இருக்கட்டும். நன்கு மூச்சை இழுத்து விடவும். 1-10 வரை எண்ணவும். மூச்சை விட்டபடியே கால்களில் இருந்து கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து, சாதாரணமாக உட்காரவும். நிதானமாக மூச்சை இழுத்து விட்டு, ரிலாக்ஸ் செய்யவும்.

மார்பு விரிவடைவதால் சுவாசம் நன்கு நடைபெறுகிறது. வயிறு பகுதி இழுக்கப்படுவதால், தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றன. தோள், முதுகுத்தண்டு பலம் பெறுகின்றன. முதுகுவலி குறைகிறது. கழுத்து வலி, முதுகு வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – காற்றாடி மரம்

SCROLL FOR NEXT