வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 05: சூப்பர் பிரெய்ன் யோகா

எஸ்.ரவிகுமார்

‘சூப்பர் பிரெய்ன் யோகா’ - பள்ளியில் ஹோம் ஒர்க் செய்யாத எல்லோருக்கும் இது பரிச்சயமானதே. கரெக்ட்! தோப்புக்கர்ணம்தான். இதைத்தான் ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்று உலகமே கொண்டாடுகிறது.

நேராக நின்று, கால்களை இயன்ற வரை சேர்த்து வையுங்கள். முதலில் இடது கையால் (கட்டை விரல் ஆள்காட்டி விரல்) வலது காதை பிடிக்கவும். அப்புறம், வலது கையால் இடது காதை பிடிக்கவும். கைகள் மார்பை ஒட்டி இருக்கட்டும். கட்டைவிரல்கள் முன்பக்கமாக இருக்கட்டும். நன்கு மூச்சை இழுங்கள். வெளியே விட்டபடியே, கீழே உட்காருங்கள்.. மூச்சை இழுத்தபடி எழுந்திருங்கள். (ஒன்னு..) மீண்டும் மூச்சை விட்டபடியே உட்காருங்கள் இழுத்தபடி எழுந்திருங்கள் (ரெண்டு..) தொடக்கத்தில் இப்படி 5 செய்தால் போதும். முட்டி வலி இல்லாவிட்டால் அதிகபட்சம் 15 செய்யலாம். ஒரு கண்டிஷன்.. உட்கார்ந்த வேகத்தில் ஸ்பிரிங் போல திடுமென எழக்கூடாது. நிதானமாக உட்கார்ந்து, நிதானமாக எழ வேண்டும். எழும்போது, விரல்களால் காதில் சற்று அழுத்தம் கொடுக்கவும். 5 செய்வதற்கே மூச்சு வாங்கினால் 3 போதும். முட்டி வலி இருந்தால் அதுகூட வேண்டாம்.

மாணவர்களுக்கு மிகவும் ஏற்றது. காதில் இருக்கும் அக்குபஞ்சர் பாயின்ட்கள் தூண்டப்படுவதால் மூளை சுறுசுறுப்படையும். சிந்தனைத் திறன், கற்பனை வளம், நினைவாற்றல் மேம்படும். கவனச் சிதறல் குறைந்து, மனம் ஒருமுகப்படும். மன அமைதி கிடைக்கும். ஹோம் ஒர்க் செய்யாதவர்களை தோப்புக்கர்ணம் போடச் சொல்வது இதற்காகத்தான்.

நாளை – ஐந்தில் வளையாதது..?

SCROLL FOR NEXT