அரபு மற்றும் பாரசீக நாடுகளைச் சேர்ந்தவர்கள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கச்சா எண்ணெய்யை பல்வேறு வகைகளாகப் பிரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைக்காலத்தில் எகிப்து நாட்டில் காயங்களை ஆற்றும் மருந்தாக பெரோலியப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
கிமு 480-ம் ஆண்டில் கச்சா எண்ணெய்யை துணியில் தோய்த்து, அதை அம்பின் மீது கட்டி, எதிரி படைகள் மீது பாரசீக படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த டிரேக் என்பவர்தான் முதல்முறையாக கச்சா எண்ணெய்யில் இருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுத்தார்.
சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி ஆகிறது.
உலகின் மொத்த பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா முதல் இடத்திலும், அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளன.
பிளாஸ்டிக் பாட்டில்கள், கிரேயான்ஸ், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தியிலும் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகின் எரிபொருள் தேவையில் 88 சதவீதத்தை பெட்ரோலியப் பொருட்கள் பூர்த்தி செய்கின்றன.
இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 86 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.