வலைஞர் பக்கம்

பளிச் பத்து 133: குடை

பி.எம்.சுதிர்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் குடைகளைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப காலகட்டத்தில், பனை ஓலைகளால் குடைகள் தயாரிக்கப்பட்டன.

பண்டைய காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக குடைகள் இருந்துள்ளன.

குடைகள் தயாரிப்பில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்யு நகரில் மட்டுமே குடைகளைத் தயாரிக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.

ஸ்டீல் கம்பிகளைக் கொண்ட நவீன ரக குடைகளை சாமுவேன் பாக்ஸ் என்பவர் 1852-ம் ஆண்டில் முதல் முறையாக வடிவமைத்தார்.

பிராட்ஃபோர்ட் பிலிப்ஸ் என்பவர் 1969-ம் ஆண்டில் மடக்கும் குடைகளை (folding umbrella) கண்டுபிடித்தார்.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 33 மில்லியனுக்கும் மேற்பட்ட குடைகள் விற்கப்படுகின்றன.

ஜப்பானிய மக்கள் சராசரியாக 3.3 குடைகளை வைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டுக்குள் குடையை விரித்து வைத்தால் கெட்ட விஷயம் நடக்கும் என்பது எகிப்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT