உலகின் மிகப்பெரிய மிருகமான யானைகள், சுமார் 10 டன் வரை எடை கொண்டவை.
ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என்று 2 வகையான யானைகள் உள்ளன.
யானைகள் 13 அடி உயரம் வரை வளரும்.
யானைகள் சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
யானைகளால் தங்கள் தும்பிக்கையில் 8 லிட்டர் தண்ணீர் வரை வைத்திருக்க முடியும்.
யானைகளின் மூளை, மனிதர்களின் மூளையைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும்.
யானைகள் நாளொன்றுக்கு சராசரியாக 140 கிலோ எடைகொண்ட உணவை உண்ணும்.
மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் உணர்ச்சிகளும் குடும்ப பாசமும் உள்ளது.
பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கவும், உடலின் ஈரப்பதத்தை காப்பாற்றிக்கொள்ளவும் யானைகள் தங்கள் மீது மண்ணை வாரிப் போடுகின்றன.
யானைகள் கருவுற்ற பிறகு குட்டிகளை ஈன 22 மாதங்கள் ஆகும்.