வாடிகன் நகரம், உலகின் மிகச்சிறிய நாடாகும். இதன் மொத்த நிலப்பரப்பே 121 ஏக்கர்தான்.
இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குள் வாடிகன் நகரம் அமைந்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த ஓவியங்களும், சிலைகளும் இங்குள்ள தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தபால் தலை விற்பனை மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் பணம் ஆகியவைதான் வாடிகன் நகரின் முக்கிய வருவாயாகும்.
இத்தாலியன் மற்றும் லத்தீன் மொழிகள் இந்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகிறது.
வாடிகன் நகரில் விவாகரத்து சட்டம் அமலில் இல்லை.
இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலியா, உலகின் 2-வது மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயமாகும். இதைக் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆகியுள்ளன.
இங்குள்ள மக்களில் 100 சதவீதத்தினரும் கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஐக்கிய நாடுகள் சபையில் வாடிகன் நகரம் உறுப்பு நாடாக இல்லை.
இத்தாலிய மக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரியில் 10 சதவீதத்தை வாடிகன் நகருக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.