வலைஞர் பக்கம்

பளிச் பத்து 128: புற்றுநோய்

பி.எம்.சுதிர்

புற்றுநோயால் 2020-ம் ஆண்டில் சுமார் 1 கோடி பேர் இறந்துள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்துவிட முடியும்.

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

புற்றுநோயால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வகை புற்றுநோய்கள் உள்ளன. புற்றுநோயால் உடலில் எந்த பகுதி வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள முதல் 3 நாடுகளாக சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உள்ளன.

அமெரிக்காவில் அதிகம் உள்ள புற்றுநோயாக தோல் புற்றுநோய் உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

கிமு 4-ம் நூற்றாண்டிலேயே புற்றுநோய் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

புற்றுநோயை முதலில் எகிப்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT