வலைஞர் பக்கம்

பளிச் பத்து 126: புலி

பி.எம்.சுதிர்

உலகில் உள்ள புலிகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன.

புலிகளால் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை ஓட முடியும்.

புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

நன்கு வளர்ந்த புலிகளின் எடை 360 கிலோ வரை இருக்கும்.

புலிகளின் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம்வரை கேட்கும்.

புலிகளால் இரவில் நன்றாகப் பார்க்க முடியும். அதனால் அவை பெரும்பாலும் இரவில்தான் வேட்டையாடும்.

எப்போதும் புலிகள் தனியாகத்தான் இரைகளை வேட்டையாடும்.

ஒவ்வொரு புலிகளின் உடல்களில் உள்ள வரிகளிலும் வித்தியாசம் இருக்கும். இதை வைத்து புலிகளை தனித்தனியாக அடையாளம் காண முடியும்.

காயங்களுக்கு சிறந்த மருந்தாக புலிகளின் எச்சில் கருதப்படுகிறது.

புலிகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை உறங்கும்.

SCROLL FOR NEXT