வலைஞர் பக்கம்

பளிச் பத்து 122: அல்ஜீரியா

பி.எம்.சுதிர்

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் 10-வது மிகப்பெரிய நாடாகவும் அல்ஜீரியா உள்ளது.

அந்நாட்டின் பரப்பளவில் 5-ல் 4 பங்கு பாலைவனமாக உள்ளது.

அல்ஜீரியாவின் மொத்தமுள்ள நிலப்பகுதியில், சுமார் 12 சதவீத இடத்தில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.

நவம்பர் 1-ம் தேதி அல்ஜீரியாவில் தேசிய புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 7 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அல்ஜீரியாவில் உள்ளன.

2019-ம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாக அல்ஜீரியா அறிவிக்கப்பட்டது.

கால்பந்தில் சிறந்து விளங்கும் அல்ஜீரியா, ஆப்பிரிக்க கோப்பையை 2 முறை வென்றுள்ளது.

அல்ஜீரிய மக்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.

எண்ணெய் வளமிக்க நாடான அல்ஜீரியா, மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்காத நாடாக உள்ளது.

அல்ஜீரிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT