வலைஞர் பக்கம்

பளிச் பத்து 121: தங்கம்

பி.எம்.சுதிர்

மனிதர்களால் இதுவரை சுமார் 2 லட்சம் டன் தங்கம் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து கண்டங்களிலும் தங்கம் கிடைக்கிறது.

தங்கத்தால் செய்யப்பட்ட மிக பழமையான பொருள் பல்கேரியாவில் கிடைத்துள்ளது. இது 6,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

1912-ம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட தங்கப் பதக்கங்கள், முழுக்க முழுக்க தங்கத்தாலேயே செய்யப்பட்டன. ஆனால், அதன் பிறகு அவை வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்படுகிறது.

கடல்களின் ஆழத்தில் சுமார் 10 பில்லியன் டன் தங்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், அவற்றை எடுப்பது மிகவும் கடினம்.

தங்கத்தை 1,064 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்கலாம்.

தங்கம் உற்பத்தியில் தற்போது சீனா முதல் இடத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்கக் கட்டியை மிட்சுபிஷி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் எடை 250 கிலோ.

உலகின் மிகப்பெரிய தங்கக் காசு வியன்னாவில் உள்ளது. அதன் எடை 31.1 கிராம்.

ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 0.2 மில்லிகிராம் தங்கம் இருக்கும்.

SCROLL FOR NEXT