கால்பந்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டியாக கிரிக்கெட் உள்ளது. 2.5 பில்லியன் மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கின்றனர்.
16-ம் நூற்றாண்டில் முழுக்க முழுக்க சிறுவர்கள் விளையாடும் போட்டியாகவே கிரிக்கெட் இருந்தது. பின்னர் நாளடையில் இது பெரியவர்களுக்கான ஆட்டமாக உருவெடுத்தது.
உலகெங்கிலும் 31 நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
கிரிக்கெட் போட்டிகளுக்கான பிட்ச்சின் நீளம் 20.12 மீட்டர் (22 யார்டுகள்) ஆகும்.
கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை 163 கிராம்.
17-ம் நூற்றாண்டு முதல் பெண்களும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
கிரிக்கெட் போட்டியில் இதுவரை அதி வேகமாக பந்துவீசிய வீரர், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் ஆவார். அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது.
1729-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட், ஓவல் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.