ஆஸ்திரிய நாட்டின் தேசிய தினமாக அக்டோபர் 26 உள்ளது.
உலகின் மிகப்பெரிய பனிக்குகை ஆஸ்திரியாவின் வெர்ஃபென் எனும் இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரியாவின் பிரபலமான விளையாட்டாக பனிச்சறுக்கு விளையாட்டு உள்ளது.
பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1964 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்துள்ளன.
அஞ்சல் அட்டைகள் முதன்முதலில் ஆஸ்திரியாவில்தான் வெளியிடப்பட்டன.
வியன்னா நகரில் உள்ள ஆஸ்திரிய தேசிய நூலகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 2 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் மாடெர்ஸ்பெர்கர் என்பவர் 1818-ம் ஆண்டில் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
ஆஸ்திரியாவில் ஒவ்வொரு குழந்தையும் 14 வயதை எட்டியதும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் உள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும், ராணுவப் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
ஆஸ்திரிய மக்களின் சராசரி ஆயுள் 81 வயது.