உலகில் சதுர வடிவில் 2 தேசியக் கொடிகள் மட்டுமே உள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் வாடிகன் நகரின் கொடிகள்தான் அவை.
தெற்கு சூடான் நாடு 2011-ம் ஆண்டில்தான் உருவானது. ஆனால் அந்நாட்டின் தேசியக் கொடி 2005-ம் ஆண்டிலேயே உருவாகியுள்ளது.
அனைத்து ஸ்காண்டினேவியன் நாடுகளின் தேசியக் கொடியிலும் சிலுவை சின்னம் உள்ளது.
நாஜி ஜெர்மனியின் தேசியக் கொடி ஹிட்லரால் வடிவமைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கென்று தனியாக ஒரு கொடி 1984-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பராகுவே, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தேசிய கொடிகள் ஒவ்வொரு புறத்தில் இருந்து பார்க்கும்போதும் வெவ்வேறு தோற்றத்தைக் கொடுக்கும்.
நிகாரகுவா, டோமினிகா ஆகிய 2 நாடுகளின் கொடிகளில் மட்டுமே ஊதா நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான் மிகவும் பழமையான தேசிய கொடியாகும். இக்கொடி 1625 ஆண்டுமுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தனி நாடாக உருவாகி 100 ஆண்டுகள் கழித்துதான் கனடாவுக்கான தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.
1814 முதல் 1830-ம் ஆண்டுவரை பிரான்ஸ் நாட்டின் கொடியில் வெள்ளை நிறம் மட்டுமே இருந்துள்ளது.