வலைஞர் பக்கம்

பளிச் பத்து 110: கழுதை

பி.எம்.சுதிர்

கழுதைகள் முதலில் பாலைவனப் பகுதியில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுக்காக வேலை செய்யும் விலங்காக கழுதை உள்ளது.

பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் சரக்குகளைக் கொண்டுசெல்ல கழுதைகளை அதிகம் பயன்படுத்தினர்.

கழுதைகள், குதிரைகளைவிட வலிமையான விலங்காகும்.

கழுதைகளால் தங்கள் 4 கால்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.

கழுதைகளுக்கு நீண்ட நேரம் மழையில் நனைவது பிடிக்காது.

கழுதைகள் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.

கழுதைகள் ஒரு குழுவாக இருக்கும்போது சிறப்பாக செயல்படும்.

கழுதைகளுக்கு ஞாபகசக்தி அதிகம். 25 ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடங்களைக்கூட அவற்றால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

கழுதைகளை அத்தனை சீக்கிரத்தில் பயமுறுத்த முடியாது.

SCROLL FOR NEXT