உலகில் 60-க்கும் மேற்பட்ட வகையிலான எலிகள் உள்ளன.
ஒருசில வகை எலிகளால் ஒரு மைல் தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.
எலிகள் தங்களின் உடல் வெப்பத்தை சமன்படுத்த வால்களை பயன்படுத்துகின்றன.
எலிகள் ஒரே நேரத்தில் 20 குட்டிகள் வரை போடும்.
ஒவ்வொரு ஆண்டிலும் விவசாய உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை எலிகள் அழிப்பதாகக் கூறப்படுகிறது.
தாங்கள் இருக்கும் சூழலில் சிறு மாற்றம் இருந்தாலும் எலிகள் உஷாராகிவிடும்.
எலிகளின் பற்கள் ஆண்டுக்கு 5 அங்குல நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.
பற்கள் அதிக நீளத்துக்கு வளர்வதை தடுப்பதற்காக பிளாஸ்டிக், மரங்கள் போன்றவற்றை எலிகள் கடிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேஷ்நோக் என்ற இடத்தில் எலிகளுக்கு கோயில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய எலி வகை, 2009-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை எலிகளின் நீளம் 81 சென்டிமீட்டர்.