1903-ம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை பறக்க வைத்தனர்.
உலகின் மிகப் பெரிய ரன்வே, சீனாவில் உள்ள குவாம்பா பம்பா விமான நிலையத்தில் உள்ளது.
விமானத்தில் உள்ள அவசரகால முகக் கவசங்களில் 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும்.
விமான நிறுவனங்கள் ஆண்டுதோறும் 640 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகின்றன.
விமானத்தை இயக்கும்போதோ, அதற்கு முன்போ, விமானியும், துணை விமானியும் ஒரே உணவை சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விமானியாக இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதியாகும்.
விமானங்களில் பாதுகாப்பான பகுதியாக, அதன் வால் பகுதி உள்ளது.
உலகின் மிகப்பெரிய விமான சர்வீஸ் நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளது.
பயணிகள் விமானம் சராசரியாக மணிக்கு 550 மைல் வேகத்தில் பறக்கிறது.
விமானங்களுக்குள் பாதரசத்தை எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி இல்லை.