யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
ஆக்ரா கோட்டைக்கும் தாஜ்மஹாலுக்கும் இடையிலான தூரம் 2.5 கிலோமீட்டர் மட்டுமே.
94 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.
1558-ம் ஆண்டில் இக்கோட்டையை கட்டத் தொடங்கிய அக்பர் சக்கரவர்த்தி, 1565-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகளை முடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ராஜஸ்தானிய செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டையில், சலவைக் கற்களைப் பதித்து பின்னாளில் ஷாஜஹான் இதை மேலும் அழகாக்கினார்.
யமுனை நதியின் கரையில் ஆக்ரா கோட்டை அமைந்துள்ளது.
1857-ம் ஆண்டில் நடந்த முதலாவது சுதந்திரப் போரில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்தது.
ஆக்ரா கோட்டையில் டெல்லி கேட், லாகூர் கேட் என 2 நுழைவுவாயில்கள் உள்ளன.
இக்கோட்டையின் அறைகளில், ஏதாவது ஒரு இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினாலே அறை முழுவதும் ஒளிமயமாகும் வகையில் அதற்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
ஆக்ரா கோட்டையின் சுவரில் ஏராளமான நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனால் பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் அவற்றை பெயர்த்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.