ஸ்பெயின் நாட்டின் தேசிய தினமாக அக்டோபர் 12 கொண்டாடப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2-வது மிகப்பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
ஸ்பெயின் மக்கள் ஆரோக்கியம் மிக்கவர்களாக உள்ளனர். இவர்களின் சராசரி ஆயுள் 83 வயது.
உலகின் முதல் நவீன நாவல், 1605-ம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியில்தான் எழுதப்பட்டது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 47 உலக பாரம்பரியச் சின்னங்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ளன.
ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ஸ்பெயின் முதல் இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் நாட்டுக்கு அடுத்ததாக அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக ஸ்பெயின் உள்ளது. இந்நாட்டுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 82.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
உலகின் பழமையான உணவகமாக கருதப்படும் ‘ரெஸ்டாரண்ட் போடின்’ ஸ்பெயின் நாட்டில் 1725-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் திராட்சையை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஸ்பானிஷ் மக்களின் நம்பிக்கை.
ஐரோப்பிய நாடுகளிலேயே மதுபான பார்கள் அதிகம் நிறைந்த நாடாக ஸ்பெயின் உள்ளது.