வலைஞர் பக்கம்

பளிச் பத்து 102: காகம்

பி.எம்.சுதிர்

காகங்களின் மூளை பெரியது என்பதால் அவற்றின் ஞாபகசக்தி அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காகங்களால் மனிதர்களின் முகங்களைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.

காகங்கள் ஒரே தவணையில் 3 முதல் 9 முட்டைகள் வரை இடும்.

முட்டையில் இருந்து வெளிவரும் காகங்கள், 4 வாரங்கள் மட்டுமே தாங்கள் பிறந்த கூட்டில் இருக்கும்.

காகங்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.

மனிதர்கள் போலவே காகங்களும் வயதான தங்கள் பெற்றோருக்காக இரைதேடிச்சென்று கொடுக்கும்.

தங்களுக்கான உணவை சேமித்து வைக்கும் பழக்கம் காகங்களுக்கு உண்டு.

ஜப்பானில் மின்கம்பிகள், மின்மாற்றிகளை காகங்கள் சேதப்படுத்துவதால் அடிக்கடி மின் இணைப்பு பாதிக்கப்படுகிறது.

அன்டார்டிகா கண்டம் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காகங்கள் உள்ளன.

தானியங்கள், பூச்சிகள் முதல் இறந்துபோன மிருகங்களின் உடல்கள் வரை, தங்களுக்கு கிடைக்கும் எல்லா உணவுகளையும் காகங்கள் சாப்பிடும்.

SCROLL FOR NEXT