இந்திய விமானப் படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது.
முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்’ என்ற பெயரில் விமானப்படை அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு அதிலிருந்து ராயல் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
இந்திய விமானப்படை உலகில் 7-வது வலிமையான விமானப் படையாக உள்ளது.
1933-ம் ஆண்டுமுதல் இதுவரை இந்திய விமானப் படையின் லச்சினை 4 முறை மாற்றப்பட்டுள்ளது.
விமானப் படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் 60 தளங்கள் உள்ளன.
இந்திய விமானப் படையில் முதல் பெண் ஏர் மார்ஷலாக பத்மாவதி பந்தோபாத்யாய நியமிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில், இந்திய விமானப் படைக்கு ஒரு தளம் உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது 20 ஆயிரம் பேரை மீட்டு விமானப் படை சாதனை படைத்துள்ளது.
இந்திய விமானப் படையின் அருங்காட்சியகம் டெல்லியில் அமைந்துள்ளது.