வலைஞர் பக்கம்

பளிச் பத்து 98: சஹாரா பாலைவனம்

செய்திப்பிரிவு

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், 9.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் 31 சதவீத நிலப்பரப்பை சஹாரா பாலைவனம் கொண்டுள்ளது.

இன்னும் 15 ஆயிரம் ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் பசுமைப் பகுதியாக மாறும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்ஜீரியா, லிபியா, எகிப்து, மாலி, மொராக்கோ, சூடான் துனீஷியா உள்ளிட்ட நாடுகளில் சஹாரா பாலைவனம் பரந்து விரிந்துள்ளது.

வெப்பம் மிகுந்த பகுதியாக இருந்தாலும், சஹாரா பாலைவனத்தில் சுமார் 20 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு பெண்கள்தான் தலைவராக உள்ளனர்.

சஹாரா பாலைவனத்தில் உள்ள அல் அசிசியா (லிபியாவில் உள்ளது) நகரம்தான் உலகிலேயே அதிக வெப்பமான (136.4 டிகிரி பாரன்ஹீட்) நகரம்.

சஹாரா பாலைவனத்தில் ஏராளமான மணல் மேடுகள் உள்ளன.

இந்த பாலைவனத்தில் ஓடும் ஒரே நதியாக நைல் நதி உள்ளது.

சஹாரா பாலைவனப் பகுதியில் ஆண்டுக்கு 4 அங்குலம் அளவுக்கு மட்டுமே மழை பெய்கிறது.

SCROLL FOR NEXT