வலைஞர் பக்கம்

பளிச் பத்து 94: முதலை

செய்திப்பிரிவு

முதலைகளுக்கு 60 முதல் 110 பற்கள் வரை இருக்கும். அவற்றின் பற்கள் விழவிழ முளைத்துக்கொண்டே இருக்கும்.

உலகின் நீளமான முதலை பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் 20.2 அடி.

முதலைகளுக்கு வியர்க்காது. அவை தங்கள் வாயை திறந்து வைத்துக்கொள்வதன் மூலம் உடலை குளிர்விக்கிறது.

முதலைகளால் தண்ணீரில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் நீந்த முடியும்.

உலகில் 23 வகையான முதலைகள் உள்ளன.

சுமார் ஒரு மணிநேரம் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்க முதலைகளால் முடியும்.

பெரிய முதலைகள், சிறியவகை முதலைக் குட்டிகளை உண்ணும்.

வயிற்றுக்குள் உள்ள உணவை செரிக்க வைப்பதற்காக முதலைகள் சிறு கற்களை விழுங்கும்.

முதலைகளால் ஒரு கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்.

பெரிய முதலைகளால் மாதக்கணக்கில் உணவு உண்ணாமல் வாழ முடியும்.

SCROLL FOR NEXT