400 வகையான பழங்குடிகள் வாழும் பகுதிகளை இணைத்து 1914-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நைஜீரியா உருவாக்கப்பட்டது.
தனி நாடாக உருவாக்கப்பட்ட பிறகு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நைஜீரியா 1960-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்க நாடாக நைஜீரியா உள்ளது. 2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்நாட்டில் 17 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நைஜீரியாவில் வாழ்கின்றனர்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக 55 வயது வரை வாழ்கிறார்கள்.
நைஜீரியா நாட்டில் 521 மொழிகள் பேசப்படுகின்றன. ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது.
எண்ணெய் உற்பத்தியில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.
1996-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நைஜீரியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
1991-ம் ஆண்டுவரை நைஜீரியாவின் தலைநகராக லாகோஸ் இருந்தது. பின்னர் அபுஜா நகருக்கு தலைநகரம் மாற்றப்பட்டது.
நைஜீரிய திரையுலகம் ‘நாலிவுட்’ என அழைக்கப்படுகிறது.