வலைஞர் பக்கம்

பளிச் பத்து 92: காபி

செய்திப்பிரிவு

ஏமன் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் காபி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 1-ம் தேதி, சர்வதேச காபி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகில் நாளொன்றுக்கு 2.25 பில்லியன் கப் காபியை மக்கள் அருந்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள் ஆண்டொன்றுக்கு காபி குடிப்பதற்காக மட்டுமே 1,092 டாலர்களை செலவழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கல்லீரல் சேதமடைவதைத் தடுக்க காபி உதவுவதாக கூறப்படுகிறது.

காபிக்கொட்டை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. 40 சதவீத காபிக் கொட்டைகள் இங்கு உற்பத்தியாகின்றன.

ரோபஸ்டா, அராபிகா என்று 2 வகையான காபிக் கொட்டைகள் உள்ளன.

அதிக அளவு காபி குடிப்பவர்களாக பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.

தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்ப காபியின் வாசனையே போதுமானதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூக் இபெட்சன் என்பவர் 3.66 விநாடிகளில் ஒரு கப் காபியை குடித்து (2020-ம் ஆண்டில்) கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

SCROLL FOR NEXT