வலைஞர் பக்கம்

பளிச் பத்து 90: மெழுகுவர்த்தி

செய்திப்பிரிவு

கிமு 500-ம் ஆண்டு காலகட்டத்திலேயே ரோமானியர்கள் மெழுகுவர்த்திகளை தயாரிக்கத் தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1834-ம் ஆண்டில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜோசப் மோர்கன் என்பவர், மெழுகுவர்த்திகளை தயாரிப்பதற்கான இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,500 மெழுகுவர்த்திகளை தயாரிக்க முடிந்தது.

மின்விளக்குகளை கண்டுபிடிப்பதற்கு முன்பு இரவு நேரத்தில் ஒளியேற்ற மேற்கத்திய நாடுகளில் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டன.

உலகின் மிக நீளமான மெழுகுவர்த்தி 39 மீட்டர் நீளம் கொண்டது. இது ஸ்டாக்ஹோம் நகரில் உருவாக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தயாரிப்பு நிறுவனமாக ‘யாங்கி கேண்டில்’ நிறுவனம் உள்ளது. ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு மெழுகுவர்த்திகளை விற்பனை செய்கிறது.

ஆண்டின் மற்ற காலங்களைவிட கிறிஸ்துமஸ் காலத்தில் 35 சதவீதம் அதிகமாக மெழுகுவர்த்திகள் விற்பனையாகின்றன.

அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மெழுகுவர்த்திகள் விற்பனையாகின்றன.

மெழுகுவர்த்திகளை தயாரிப்பவர்களை ஆங்கிலத்தில் ‘சாண்ட்லர்’ என அழைக்கிறார்கள்.

பிறந்தநாள் கேக் மீது மெழுகுவர்த்திகளை ஏற்றும் வழக்கத்தை ஜெர்மானிய மக்கள்தான் தொடங்கிவைத்தனர்.

SCROLL FOR NEXT