வலைஞர் பக்கம்

பளிச் பத்து 84: பியானோ

செய்திப்பிரிவு

பியானோ இசைக்கருவி, 1709-ம் ஆண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பர்டொலோமோ டி பிரான்சஸ்கோ கிறிஸ்டோஃபொரி என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்டது.

பியானோக்கள் முதலில் பியானோஃபோர்ட் என்று அழைக்கப்பட்டன.

பியானோக்கள் சராசரியாக 450 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

இந்த இசைக்கருவியில் 12 ஆயிரம் பாகங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரம் பாகங்கள் அசையும் பாகங்களாகும்.

உலகின் மிகப்பெரிய பியானோ, நியூஸிலாந்தில் அட்ரியான் மான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 5.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த பியானோவின் எடை 1.4 டன்.

அதிக விலைமதிப்புள்ள பியானோ, 3.22 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் 18 மில்லியன் பியானோ இசைக் கலைஞர்கள் உள்ளனர்.

உலகின் மிகச்சிறந்த பியானோவாக ஸ்டீன்வே நிறுவனம் தயாரிக்கும் பியானோக்கள் விளங்குகின்றன.

பியானோவில் உள்ள விசைகள், யானைகளின் தந்தங்களால் முன்பு தயாரிக்கப்பட்டன.

போலந்து நாட்டைச் சேர்ந்த ரொமால்ட் கோபர்ஸ்கி என்பவர் பியானோவை தொடர்ந்து 103 மணிநேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.

SCROLL FOR NEXT