வலைஞர் பக்கம்

பளிச் பத்து 83: கேரட்

செய்திப்பிரிவு

கேரட்கள் முதன்முதலில் ஆப்கானிஸ்தானில் விளைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப காலக்கட்டத்தில் மருத்துவத்துக்கு மட்டுமேகேரட்கள் பயன்படுத்தப்பட்டன.

உருளைக்கிழங்குக்கு அடுத்ததாக மக்களிடம் அதிகம் புகழ்பெற்ற காயாக கேரட் உள்ளது.

ஆண்டொன்றுக்கு சுமார் 40 மில்லியன் டன் கேரட் விளைவிக்கப்படுகிறது.

கேரட்களில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது.

ஆரஞ்சு நிறத்தைத் தவிர வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா நிறங்களிலும் கேரட்கள் உள்ளன.

கேரட்கள் அதிகபட்சம் 10 செ.மீ. விட்டம் கொண்டதாக இருக்கும்.

சீனா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கேரட் அதிகமாக விளைகிறது.

கேரட் செடிகள் 1 மீட்டர் உயரம் வரை வளரும்.

இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் கேரட்கள் அதிகமாக விளைகின்றன.

SCROLL FOR NEXT