“ஏன் விமலா சிபாரிசு வாங்கி அந்த அங்கன்வாடி வேலையில நீ கண்டிப்பா சேரத்தான் வேணுமா?”
“ஆமாங்க கண்டிப்பா சேர ணும்” என்று கணவன் ரமண னுக்கு பதில் கூறினாள் விமலா.
“ஏன் விமலா நாம ரெண்டுபேர் சம்பாதிச்சுதான் குடும்பம் நடத்தணும்கிற நிலமையில நாம இல்ல. அப்புறம் ஏன் இப்படி அடம் புடிக்கிறேன்னு தெரியலை?”
“ஏங்க நான் பணத் தாசை புடிச்சவள்னு நினைக் கிறீங்களா?”
“இல்லை... அதனாலதான் கேட்கிறேன் விமலா.”
“சிபாரிசு மூலமா அந்த அங்கன்வாடி வேலையை நான் வாங்க நினைக்கிறது காசுக்காக இல்லைங்க பாசத் துக்காக.”
“புரியலை விமலா?”
“நீங்க வேலைக்குப் போன பிறகு சமைச்சிட்டு நான் சும்மாவே இருக்கறேன், நேரமே போக மாட்டேங்குது. நமக்கு ஒரு குழந்தை பிறந்தாலாவது அதை கொஞ்சிட்டு நேரத்தை போக்குவேன், கடவுள் நமக்கு அந்த பாக்கியத்தை தரலை, நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால நம்ம சொந்தங்கள் நம்மளை குடும்பத்துல சேர்க்கலை,
என்னோட அண்ணன் கஷ்டப்படுறார், அவரோட குழந்தையை எங்க அண்ணி அங்கன்வாடியில கொண்டு விட்டுட்டுப் போறதை நான் பார்த்தேன், அவங்க கூட பேசமுடியாட்டியும் என் அண்ணன் குழந்தையை தூக்கி கொஞ்சவாவது முடியு மேன்னுதான் அந்த வேலைக்குப் போக நான் முடிவெடுத்தேன், அதோட கள்ளம் கபடமில்லாத ஏகப்பட்ட குழந்தைகள் அங்கன் வாடிக்கு வரும். அதை எல்லாம் கொஞ்சி மகிழலாம்ன்னும் தாங்க” என்ற மனைவியின் பேச்சில் கரைந்த ரமணன் அந்த வேலையை அவளுக்கு வாங்கிக் கொடுக்க மனதில் உறுதி பூண்டான்.