வலைஞர் பக்கம்

பளிச் பத்து 81: ஐபிஎல் கிரிக்கெட்

செய்திப்பிரிவு

முதலில் 1995-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் இன்று வரை கேப்டனை (தோனி) மாற்றாத ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் அதிகமாக (6 முறை) ஆடிய அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக விராட் கோலி 177 போட்டிகளில் 5,412 ரன்களை குவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய வீரர் பிரவீன் குமார். இவர் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

ஹர்பஜன் சிங், பார்த்தீவ் படேல் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக முறை (13) டக் அவுட் ஆகியுள்ளனர்.

ஐபிஎல்லில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் கிறிஸ் கெயில். இவர் 125 ஆட்டங்களில் 326 சிக்சர்கள் அடித்துள்ளார்.

அமித் மிஸ்ரா, இத்தொடரில் அதிகமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை வீரரான மலிங்கா, இத்தொடரில் அதிகபட்சமாக 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT