1934-ம் ஆண்டில் வெளியான ‘தி லிட்டில் வைஸ் ஹென்’ என்ற குறும்படத்தில் முதல்முறையாக டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றது.
இக்கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.
ஓவல் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் டொனால்ட் பிராட்மேன் டக் அவுட் ஆனார். இதை நினைவுபடுத்தும் வகையில் ‘டொனால்ட் டக்’ என்று தன் பாத்திரத்துக்கு டிஸ்னி பெயர் வைத்தார்.
டொனால்ட் டக்கின் முழுப்பெயர் டொனால்ட் ஃபாண்டிலெரி டக். .
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தைவிட டொனால்ட் டக் 6 வயது இளையதாகும்
கில்ரன்ஸ் நாஷ், டோனி அன்செல்மோ, டானியல் ராஸ் ஆகிய 3 நடிகர்கள் டொனால்ட் டக் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின்போது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த டொனால்ட் டக்கின் திரைப்படங்கள் அதிகமாக திரையிட்டு காட்டப்பட்டது.
ஜெர்மனிக்கு எதிரான படம் ஒன்றில் டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
மார்ச் 13-ம் தேதி டொனால்ட் டக்கின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிறது.
டொனால்ட் டக்கின் காதலியாக டெய்சி டக் என்ற கதாபாத்திரம் அறியப்படுகிறது.
- தொகுப்பு: பி.எம்.சுதிர்