வலைஞர் பக்கம்

பளிச் பத்து 75: கிடார்

செய்திப்பிரிவு

உலகின் முதல் கிடார், 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்டது.

‘கிடாரா’ என்ற ஸ்பானிஷ் வார்த்தையில் இருந்து ‘கிடார்’ என்ற ஆங்கில வார்த்தை பிறந்துள்ளது.

1931-ம் ஆண்டில் எலக்டிரிக் கிடார் அறிமுகமானது.

உலகின் மிகப்பெரிய கிடார், டெக்சாஸ் நகரில் தயாரிக்கப்பட்டது. அதன் நீளம் 13 மீட்டர்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான ஆண்டோனியோ டோரஸ் ஜுராடோ என்ற கிடார் கலைஞர் தற்போது பயன்படுத்தப்படும் நவீன கிடாரை வடிவமைத்தார்.

அர்ஜென்டினாவில் கிடார் வடிவிலான ஒரு காடு உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோ மார்ட்டின் உரேடா என்பவர் இதை உருவாக்கியுள்ளார்.

ஃபெண்டர் நிறுவனம் ஆண்டுதோறும் 90 ஆயிரம் கிடார் கம்பிகளைத் தயாரிக்கிறது.

2004-ம் ஆண்டில் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்பட்ட கிடார் 2.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேவ் பிரவுனி என்ற கலைஞர், தொடர்ந்து 114 மணி நேரம் 6 நிமிடங்கள் கிடாரை இசைத்து சாதனை படைத்துள்ளார்.

ஆண்களைவிட பெண்கள் கிடார் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT