உலகில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதல் அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் ஆகும்.
இந்த தாக்குதலில், இரட்டை கோபுரத்தின் இரண்டாவது கோபுரம் 10 விநாடிகளுக்குள் விழுந்து நொறுங்கியது.
அமெரிக்கா மீதான இந்த தாக்குதலுக்கான திட்டத்தில் அல் கொய்தா இயக்கத்தின் 19 தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தனர்.
தீவிரவாத தாக்குதல் நடந்து 10 வருடங்களுக்குப் பிறகு இதற்கு மூலகாரணமான ஒசாமா பின் லேடன் அமெரிக்க வீரர்களால் கொல்லப்பட்டார்.
இந்த தீவிரவாத தாக்குதலில் 2,996 பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
தாக்குதலுக்கு பிறகு அதனால் ஏற்பட்ட 1.80 மில்லியன் டன் இடிபாடுகளை அகற்ற 9 மாதங்கள் ஆனது.
இந்த தாக்குதலில், கட்டிடத்தில் இருந்த 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை பென்ட்பாம் (PENTTBOM) என்ற பெயரில் எஃப்பிஐ நடத்தியது.
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் விமானங்கள் பறக்க 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.