வலைஞர் பக்கம்

பளிச் பத்து 69: பிரேசில்

செய்திப்பிரிவு

போர்ச்சுக்கல் நாட்டிடம் சுமார் 300 ஆண்டுகள்அடிமைப்பட்டுக் கிடந்த பிரேசில், 1822-ம் ஆண்டுசெப்டம்பர் 7-ம் தேதி விடுதலை பெற்றது.

பிரேசில் நாட்டின் தலைநகராக ரியோ டி ஜெனீரோதான் இருந்துவந்தது. 1961-ம் ஆண்டில் பிரேசிலியா நகருக்கு தலைநகரம் இடம் மாற்றப்பட்டது.

ஆஸ்கர் நீமேயர் என்பவர்தான் தலைநகர் பிரேசிலியாவை வடிவமைத்தார்

1870-ம் ஆண்டுமுதல் பிரேசில் எந்தப் போரிலும் பங்கேற்றதில்லை.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 5.5 கிலோ காபி கொட்டைகளை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரேசிலில் 90 சதவீதம் வீடுகளில் தொலைக்காட்சிகள் உள்ளன.

பிரேசில் நாட்டில் 180 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

நைஜீரியாவுக்கு அடுத்ததாக கறுப்பின மக்கள் அதிகம் வாழும் நாடாக பிரேசில் உள்ளது.

பிரேசிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற பிரேசில் நாடு, இதுவரை 5 முறை உலகக் கோப்பை கால்பந்தை வென்றுள்ளது.

SCROLL FOR NEXT