வலைஞர் பக்கம்

பளிச் பத்து 67: பொற்கோயில்

செய்திப்பிரிவு

ஐந்தாவது சீக்கிய மதகுருவான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் 1581-ம் ஆண்டில் பொற்கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கினார்.

பொற்கோயிலைக் கட்ட 8 ஆண்டுகள் ஆகியுள்ளன.

பொற்கோயில் அமைவதற்கு முன்பாக இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் குரு நானக் தியானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1762-ம் ஆண்டில் நடந்த படையெடுப்புகளின்போது இக்கோயில் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஜா ரஞ்சித் சிங் இதை புதுப்பித்துக் கட்டினார்.

பொற்கோயிலில் விசேஷ நாட்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

புனிதத் தலமாக கருதப்படும் பொற்கோயிலுக்கு, பிற மதங்களைச் சேர்ந்த சுமார் 35 சதவீதம் பேர் ஆண்டுதோறும் வருகின்றனர்.

புதுப்பித்து கட்டும்போது இக்கோயிலின் கூரைப் பகுதியில் தங்கத் தகடுகளைப் பொருத்தியதால் இக்கோயில் பொற்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பொற்கோயிலுக்கு, ‘தர்பார் சாஹிப்’, ‘ஹர்மந்தர் சாஹிப்’ ஆகிய பெயர்களும் உள்ளன.

கவுதம புத்தர் சில காலம் பொற்கோயிலில் இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் பொற்கோயில் வனங்களால் சூழப்பட்டிருந்தது.

பொற்கோயிலைச் சுற்றி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரி அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT