வலைஞர் பக்கம்

பளிச் பத்து 66: தேநீர்

செய்திப்பிரிவு

கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங், தேநீரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

தான் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைகள் எதேச்சையாக விழுந்ததால், அதன் சுவை அவருக்கு தெரியவந்துள்ளது.

உலகில் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகம் அருந்தப்படுவது தேநீர்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்டொன்றுக்கு 6.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

1904-ம் ஆண்டில் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கண்காட்சியில் ஐஸ் டீ அறிமுகமானது.

தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல் அமைந்திருக்கும்.

தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

உலகில் அதிக விலைமதிப்புள்ள தேயிலையாக டார்ஜிலிங்கில் விளையும் தேயிலை விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 62 லட்சம் டன் தேயிலை பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘டீ பேக்’ கண்டுபிடிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT