பண்டைக்கால ரோமானிய காலண்டரில், 7-வது மாதமாக செப்டம்பர் இருந்தது.
லத்தீன் மொழியில் ‘செப்டம்’ என்றால் 7 என்று அர்த்தம்.
பண்டைய ரோமன் காலண்டரில், செப்டம்பர் மாதத்துக்கு 29 நாட்கள் மட்டுமே இருந்தன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீசர்தான் இம்மாதத்தில் ஒரு நாளைக் கூட்டினார்.
நெருப்புக் கடவுளின் மாதமாக ரோமானியர்கள் இம்மாதத்தை கருதுகின்றனர்.
1939-ம் ஆண்டில் செப்டம்பர் 1-ம் தேதியன்று போலந்து நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார்.
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலும் செப்டம்பர் மாதத்தில்தான் நடைபெற்றது.
அமெரிக்காவில் மற்ற மாதங்களை விட, செப்டம்பரில்தான் அதிக குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் பல நாடுகளில் செப்டம்பர் மாதத்தில்தான் கல்வியாண்டு தொடங்குகிறது.
சிலி, உஸ்பெகிஸ்தான், கத்தார், பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாதத்தில்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.
காயங்களுக்கு ஒட்டப்படும் பேண்ட்-எய்ட், 1920-ம் ஆண்டு செப்டம்பரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.