திபெத்தில் உள்ள பூமா கேங்டாங் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம்தான் உலகில் உயரமான (கடல் மட்டத்தில் இருந்து 5,373 மீட்டர்) இடத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்.
சீனாவில்தான் குழந்தைகளுக்கு அதிக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. அங்கு வாரந்தோறும் 14 மணிநேரம் குழந்தைகள் வீட்டுப்பாடத்துக்காக செலவழிக்கிறார்கள்.
ரஷ்யாவில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
இத்தாலியில் உள்ள துரின் நகரில், ஒரே ஒரு மாணவருக்காக ஒரு பள்ளிக்கூடம் இயங்குகிறது.
ஈரானில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக பள்ளிகள் உள்ளன. இரு பாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகள் இல்லை.
வங்கதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதக்கும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் வகுப்புகள் படகுகளில் நடக்கின்றன.
பிரேசில் நாட்டில் காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, மதிய உணவுக்குள் முடிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக இல்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சான் பாப்லோ நகரில், ஒரு பள்ளிக் கட்டிடம், பழைய பாட்டில்களால் கட்டப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள சிட்டி மாண்டேஸ்வரி பள்ளிதான் உலகின் மிகப்பெரிய பள்ளி. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.