வலைஞர் பக்கம்

பளிச் பத்து 57: எகிப்து பிரமிட்கள்

செய்திப்பிரிவு

எகிப்து நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பிரமிட்கள் உள்ளன.

எகிப்தில் உள்ள ஒவ்வொரு பிரமிட்களையும் கட்ட தலா 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இவற்றைக் கட்டுவதற்கு 50 ஆயிரம் ஊழியர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரமிட் கட்ட வேண்டுமென்றால், 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிரமிட்களைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கற்களும்10 டன்களை விட அதிக எடை கொண்டவையாக உள்ளன.

பிரமிட்களின் கதவுகள் 20 டன் எடை கொண்டவை.

முற்காலத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய அமைப்பாக பிரமிட்கள் இருந்துள்ளன.

பிரமிட்களுக்குள் ரகசிய கதவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிசா நகரில் உள்ள குஃபு பிரமிட், 5,750,000 டன் எடைகொண்டது. இதன் உயரம் 481 அடி.

பிரமிட்களின் உட்புறம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT