வலைஞர் பக்கம்

பளிச் பத்து 56: வைரம்

செய்திப்பிரிவு

பூமியில் இருந்து சுமார் 100 மைல் ஆழத்தில் இருந்து வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

வைரக் கற்கள் நட்சத்திரங்களில் இருந்து உதிர்ந்தவை என்று பண்டைய காலத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய மக்கள் நம்பினர்.

1477-ம் ஆண்டு முதல்தான் திருமண நிச்சயதார்த்தத்துக்கு வைர மோதிரத்தை அணிவிக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டது.

கிமு 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் வைரத்தை அணியத் தொடங்கியுள்ளனர்.

கிபி முதல் நூற்றாண்டு வரை, இந்தியர்கள் மட்டுமே வைரத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

வைரக் கற்களை வெட்டி பாலீஷ் செய்யும்போது அதன் மொத்த எடையில் 50 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.

வைரக் கற்களால் சில நோய்களை குணப்படுத்த முடியும் என்று முன்காலத்தில் நம்பப்பட்டது.

வைரங்கள் மிகவும் உறுதியானவை. ஒரு வைரத்தை மற்றொரு வைரத்தால்தான் அறுக்க முடியும்.

போருக்கு செல்லும்போது வைர நகைகளை அணிந்து சென்றால் வெற்றி பெற முடியும் என்று முற்காலத்தில் அரசர்கள் நம்பினர்.

சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பதைத் தவிர, சில சமயங்களில் ஆறுகளின் அடியில் இருந்தும் வைரங்கள் கிடைக்கின்றன.

SCROLL FOR NEXT