வலைஞர் பக்கம்

இன்று அன்று: 1999 பிப்ரவரி 12 - சிதைக்கும் பயிரை விளைவிக்காதே!

செய்திப்பிரிவு

ராவட் மரபணு ஆய்வுக்கூடத்தில் வழக்கம் போல எலிகள் மீது சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அதன் உடலில் கூடுதல் மரபணு கண்டு அதிர்ந்தார் அர்பாட் புட்ஸாய். பயிர்களில் உள்ள நச்சுத் தன்மையை ஆராயும் நிபுணர் புட்ஸாய். மரபணு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கில் இருந்த லெக்டிக் என்னும் ரசாயனம் எலியின் குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் எதிர்ப்புச் சக்தியையும் சிதைத்திருக்கிறது எனக் கண்டறிந்து, பிரிட்டன் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த நிறுவனம் அவருடைய ஆய்வறிக்கையை ஏற்க மறுத்து வேலையிலிருந்து விலக்கியது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களினால் விளையும் அபாயங்களைத் தன் சக விஞ்ஞானிகளிடம் மீண்டும் நிரூபித்தார். மரபணு மாற்றப்பட்ட காய், கனி, தானியங்களை உட்கொள்வதால் அபாயகரமான மரபணுச் சிதைவுகள் மனித உடலில் ஏற்படும் என்பதைச் சர்வதேச விஞ்ஞானிகள் பிப்ரவரி 12, 1999-ல் அறிவித்தனர்.

- சரித்திரன்

SCROLL FOR NEXT