முதலாவது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்றது.
முதல் பாராலிம்பிக் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
பாராலிம்பிக் போட்டியை ஜப்பான் இரண்டாவது முறையாக நடத்துகிறது. அந்நாடு ஏற்கெனவே 1964-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான டிரிஷா சோர்ன், பாராலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமாக 55 பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த ஆண்டு நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டியில் 23 பிரிவுகளில் 4,350 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
பாட்மிண்டன் மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகள் இந்த பாராலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
2021 பாராலிம்பிக் போட்டிக்கான சின்னம் ‘சொமேட்டி’ என்று அழைக்கப்படுகிறது.
1968-ம் ஆண்டுமுதல் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்று வருகிறது.
இந்த பாராலிம்பிக் போட்டியில் 9 பிரிவுகளில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.