வலைஞர் பக்கம்

பளிச் பத்து 53: மிளகாய்

செய்திப்பிரிவு

மிளகாய் முதலில் மெக்சிகோ நாட்டில் விளைந்ததாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் 400-க்கும் அதிகமான மிளகாய் வகைகள் உள்ளன.

உலகில் மொத்தமாக தேவைப்படும் மிளகாயில் பாதி சீனாவில் விளைகிறது.

ஆப்பிரிக்க விவசாயிகள், தங்கள் வயலில் யானைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, வேலியாக மிளகாயைப் பயிரிடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் விளையும், ‘பட்ச் டி’ எனப்படும் மிளகாய், உலகிலேயே அதிக காரம் கொண்ட மிளகாயாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதம் 4-வது வியாழக்கிழமை, உலக மிளகாய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

15-ம் நூற்றாண்டில் கிறிஸ்டபர் கொலம்பஸ், ஐரோப்பாவுக்குமுதல் முறையாக மிளகாயைக் கொண்டுவந்தார்.

மிளகாய்ச் செடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரும்.

இந்தியாவில் போர்ச்சுகீசியர்களால் மிளகாய்அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இந்தியாவில் காரத்துக்காக மிளகுதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில்லி சாஸ்கள் 1807-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகமானது.

SCROLL FOR NEXT