1946-ம் ஆண்டில் ஐநா சபையில் ஆப்கானிஸ்தான் உறுப்பு நாடானது.
ஆப்கானிஸ்தான் குடிமக்களில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக அதிக அளவில் உள்நாட்டு போர்கள் நடந்துவரும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 26 லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
1996 முதல் 2001-ம் ஆண்டுவரை தலிபான்களின் ஆட்சியின்கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது.
ஆப்கானிஸ்தானின் முக்கிய நீராதாரமாக ஹெல்மண்ட் நதி உள்ளது.
மது குடிப்பது ஆப்கானிஸ்தானில் சட்ட விரோத செயலாகும்.
ஆப்கான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இந்நாளை, ‘நவ்ரோஸ்’ என்று அவர்கள் அழைக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் குகைகளில் கிமு 650-ல் உலகின் முதல் ஆயில் பெயின்டிங்குகள் வரையப்பட்டன.
ஆப்கானிஸ்தான் மக்களின் முக்கியத் தொழில் விவசாயமாகும்.