மம்முட்டி 
வலைஞர் பக்கம்

பளிச் பத்து 43: மம்முட்டி

செய்திப்பிரிவு

மம்முட்டியின் முழுப் பெயர், ‘முகமது குட்டி இஸ்மாயில் பணிப்பரம்பில்’ என்பதாகும்.

எல்எல்பி படித்தவரான மம்முட்டி, 2 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

மம்முட்டியின் முதல் படமான, ‘அனுபவங்கள் பாளிச்சகள்’ 1971-ம் ஆண்டு ஆகஸ்ட்6-ம் தேதி வெளியானது.

திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்முட்டி, 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில்400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.

‘ஜ்வாலயாய்’ என்ற பெயரில், தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் மம்முட்டி தயாரித்துள்ளார்.

மம்முட்டி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, ‘காழ்ச்சப்பாடு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி உள்ளது.

வாலிபால் விளையாட்டு வீரரான மம்முட்டி, கேரள வாலிபால் லீக்கின் பிராண்ட் தூதராகவும் உள்ளார்.

மம்முட்டிக்கு ராசியான எண் 369. அவரது கார்கள் அனைத்துக்கும் பதிவு எண்ணாக இதுதான் உள்ளது.

மீசையை எடுக்கப் பிடிக்காததால், அண்ணல் அம்பேத்கர் வேடத்தில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் மம்முட்டி தயங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT