வலைஞர் பக்கம்

பளிச் பத்து 42: ரஃபேல் போர் விமானம்

செய்திப்பிரிவு

ரஃபேல் போர் விமானம் 24,500 கிலோ எடை கொண்டது. இந்த விமானத்தில் 9,500 கிலோ வெடிகுண்டுகளை கொண்டுசெல்ல முடியும்.

பிரான்ஸ், எகிப்து, கத்தார், இந்தியா ஆகிய நாடுகள் ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன.

40 ஆயிரம் அடி உயரத்தில் ரஃபேல் விமானங்களால் பறக்க முடியும்.

ரஃபேல் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏவுகணைகளால் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க முடியும்.

இவ்விமானத்தில் உள்ள ராடாரால், ஒரே நேரத்தில் 15 இலக்குகளை கண்டறிந்து குறிவைத்து தாக்க முடியும்.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றலும் இவ்விமானத்துக்கு உள்ளது.

இவ்விமானத்தால் வெடிகுண்டுகளுடன் அதிகபட்சமாக மணிக்கு 1,389 கிலோமீட்டர் வேகத்திலும், வெடிகுண்டுகள் இல்லாமல் மணிக்கு 3,700 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்க முடியும்.

ரஃபேல் விமானங்கள் 15.27 மீட்டர் நீளமும், 5.3 மீட்டர் உயரமும் கொண்டது.

இதில் 17 ஆயிரம் கிலோ எரிபொருளைச் சுமந்து செல்ல முடியும்.

இவ்விமானத்தில் 2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT