வலைஞர் பக்கம்

பளிச் பத்து 41: கோதுமை

செய்திப்பிரிவு

உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியமாக கோதுமை உள்ளது.

உலகெங்கிலும் 544.6 மில்லியன் ஏக்கர்களில் கோதுமை பயிரிடப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக கோதுமை பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் 1777-ம் ஆண்டில்தான் முதன்முதலில் கோதுமை பயிரிடப்பட்டது.

அன்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் கோதுமை விளைகிறது.

கோதுமையை விதைத்த பிறகு அறுவடை செய்வதற்கு 130 நாட்கள் வரை ஆகும்.

உலகெங்கிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோதுமை வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவில் கோதுமை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உள்ளன.

மருத்துவப் பொருட்களைத் தயாரிக்கவும், வோட்கா, ஜின் போன்ற மது வகைகளைத் தயாரிக்கவும்கூட கோதுமை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை பயிரிடப்படுகிறது.

SCROLL FOR NEXT