பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975-ம் ஆண்டு தொடங்கினர்.
‘மைக்ரோ கம்ப்யூட்டர்’ மற்றும் ‘சாப்ட்வேர்’ ஆகிய வார்த்தைகளை இணைத்து, ‘மைக்ரோசாப்ட்’ என்று இந்நிறுவனத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.
1987-ம் ஆண்டில், தனது 31-வது வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், இளம் பில்லியனராக உருவெடுத்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம், 1994-ம் ஆண்டில் டைமெக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தியது. மக்கள் ஆர்வம் காட்டாததால், அதன் தயாரிப்பை நிறுத்தியது.
மைக்ரோசாப்ட் ஊழியர்கள், தங்களை ‘சாப்ட்டீஸ்’ என்று அழைத்துக்கொள்கின்றனர்.
1997-ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 31 ஆயிரம் ஊழியர்களில் 10 ஆயிரம் பேர் மில்லியனர்களாக இருந்தனர்.
மைக்ரோசாப்ட்டில் பணியாற்றும் டெவலப்பர்களின் சராசரி ஊதியம் 1,06,000 அமெரிக்க டாலர்கள்.
ரெட்மாண்ட் நகரத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முயல்கள் வளர்க்கப்படுகின்றன.
2021-ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, உலகின் மதிப்பு வாய்ந்த 2-வது மிகப்பெரிய நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோசின் ஸ்கிரீனில் வரும் பின்னணி படம் கலிபோர்னியாவில் உள்ள சொனோமா கவுண்டியில் எடுக்கப்பட்டதாகும்.