வலைஞர் பக்கம்

இன்று அன்று | 9 பிப்ரவரி 1926: அறிவியலை விழுங்கியது மதம்!

சரித்திரன்

மனிதனைப் படைத்தது கடவுள் என உலகம் நம்பிக்கொண்டிருந்தபோது, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என 1859-ல் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார் சார்லஸ் டார்வின்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமைவாய்ந்தவை நிலைத்து நிற்கும் என விளக்கிய அவருடைய ‘ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ் பை நேச்சுரல் செலெக்‌ஷன்’ புத்தகம் விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களும் பாடமாக அறிமுகப்படுத்தின.

அதிலும் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்துப் பல கட்டுரைகள் வெளியிட்டனர். இதற்கு எதிர்வினையாக ‘இறையியல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை’ ஜோசப் லீகாண்ட் 1888-ல் முன்வைத்தார். உடனடியாக கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இதை வரித்துக்கொண்டனர். கல்வி நிலையங்கள் டார்வின் அறிவியலைக் கற்பிக்கக் கூடாது என அரசை நிர்ப்பந்தித்தனர். விளைவு, பரிணாமத்துக்கு எதிரான மசோதா 1925-ல் நிறைவேற்றப்பட்டது.

அதிலும் அறிவியல்பூர்வமான பரிணாமக் கோட்பாட்டைக் கொண்டாடிய ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் அட்லாண்டா கல்வி வாரியமே 1926 பிப்ரவரி 9-ல் தடை விதித்தது. அறிவியலை மதம் விழுங்கிய நொடி அது!

SCROLL FOR NEXT