வலைஞர் பக்கம்

பளிச் பத்து 32: நிலா

செய்திப்பிரிவு

பூமியில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1.5 அங்குலம் தூரம் நிலா விலகிச் சென்றுகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த 6 ஆண்டுகளுக்குள் நிலவில் பயிர்களை விளைவிக்கஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

கடல் அலைகளின் வேகம் குறைவதற்கும், அதிகரிப்பதற்கும் நிலவின்ஈர்ப்பு சக்தி முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 238,857 மைல்களாக(384,403 கிலோமீட்டர்கள்) கணக்கிடப்பட்டுள்ளது.

நிலவைவிட உருவத்தில் 400 மடங்கு பெரியதாக சூரியன் உள்ளது.

பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியில் ஆறில் ஒரு பங்குதான் நிலவில் உள்ளது.

நிலவுக்கு காரில் செல்வதாக இருந்தால், மணிக்கு 80 மைல் வேகத்தில் அதை ஓட்டிச் சென்றால் 4 மாதங்களில் நிலவை அடையலாம்.

70 விண்கலங்கள், பழைய காலணிகள், மனிதக் கழிவுகள் உட்பட நிலவில் மனிதர்களால் 200 டன் குப்பைகள் போடப்பட்டுள்ளன.

உலகின் முதல் மனிதராக 1969-ம் ஆண்டில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்துவைத்தார். இதைத்தொடர்ந்து இதுவரை 12 விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுள்ளனர்.

விண்வெளி வீரராக இருந்த ஈகன் ஷுமேக்கரின் (Eugene Shoemaker) அஸ்தி நிலவில் தூவப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT