வலைஞர் பக்கம்

வாழ்வு இனிது: தண்ணீரைக் காப்போம்

செய்திப்பிரிவு

* உலகில் மூன்றில் ஒருவருக்குப் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்குச் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, சுகாதாரத்தில் இந்தியா உலக அளவில் 137-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 82% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. தண்ணீர் விரயம் ஒரு வகையில் சமூகக் குற்றம்!

* ஒரு வாளி சராசரியாக 20 லிட்டர் பிடிக்கும். ஒருவர் இரண்டு வாளி நீரில் குளித்தாலும் 40 லிட்டர் மட்டுமே செலவாகும். ஆனால், ஷவரில் குளிக்கும்போது ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 8 லிட்டர் நீர் கொட்டுகிறது. குளியலை ரசிப்பவர் என்றால் கால் மணி நேரம் குளித்தாலே 120 லிட்டர் ஸ்வாகா!

* பல் தேய்க்கும்போதும் சவரம் செய்யும்போதும் வாஷ்பேசினில் உள்ள குழாயைத் திறந்துவைப்பதால், கிட்டத்தட்ட 16 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், சராசரியாக அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை கொள்ளவு உள்ள குவளையைப் பயன்படுத்தி பல் தேய்த்து, வாய்க் கொப்பளிக்க முடியும். பாத்திரங்கள் கழுவும்போது குழாயைத் திறந்துவிடுவதும் தவறே! வாஷ்பேசினில் ஒரு டம்ளர் அல்லது குளியல் மக் வைத்துப் பயன்படுத்துவது நீர் சிக்கனத்துக்கு நல்ல வழி!

* சென்னையைப் பொறுத்தவரை சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 75 லிட்டர்கூட விநியோகிக்க முடியவில்லை. பல கிராமங்களில் 40 லிட்டர்கூட கிடைப்பதில்லை.

* இந்தியாவில் 82% விவசாயத்துக்கும், 8% தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மீதி 10% நம் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் 35 முதல் 40% தண்ணீர் வீணாக்கப்படுகிறது என்கின்றன ஆய்வுகள்.

* ஒரு நொடியில் ஒரு சொட்டு வீதம் நீர் கசியும்பட்சத்தில் ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்கிறார் சூழலியலாளர் நக்கீரன். குழாயைச் சரியாக மூடாமல் விட்டுவிட்டாலோ அல்லது பழுதடைந்த குழாயைச் சரிசெய்யாமல் விட்டாலோ எத்தனை லிட்டர் தண்ணீரை நாம் இழக்கிறோம்! எத்தனை பேரை அதே தண்ணீருக்காக அலையவிடுகிறோம்!

* இந்தியாவைப் பொறுத்தவரை, நாளொன்றுக்குச் சராசரியாக நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் குளிப்பதற்கு 55 லிட்டர், கழிப்பறை பயன்பாட்டுக்கு 30 லிட்டர், துணி துவைக்க 20 லிட்டர், வீட்டைச் சுத்தப்படுத்த 10 லிட்டர், பாத்திரம் கழுவ 10 லிட்டர் தண்ணீர் தேவை. சமையலுக்கும் குடிப்பதற்கும் தலா 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கும் அதிகமாகவே நாம் நீரைச் செலவழிக்கிறோம்.

* குளியலுக்கு வாளியே உகந்தது

SCROLL FOR NEXT